செய்திகள்
முல்லைப்பெரியாறு அணை

தொடர் மழை - பெரியாறு, வைகை அணை நீர் மட்டம் கிடுகிடு உயர்வு

Published On 2019-10-19 08:57 GMT   |   Update On 2019-10-19 08:57 GMT
நீர் பிடிப்பில் தொடர் மழை பெய்து வருவதால் பெரியாறு மற்றும் வைகை அணைகளின் நீர் மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருகிறது.
கூடலூர்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. குறிப்பாக தேனி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பெரியாறு, வைகை அணைகளுக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த 16-ந் தேதி முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 123.40 அடியாக இருந்தது. அணைக்கு 1976 கன அடி தண்ணீர் வந்தது. 1400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இன்று காலை அணையின் நீர் மட்டம் 124.95 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 1895 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1430 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 3608 மில்லியன் கன அடியாக உள்ளது.

வைகை அணையின் நீர் மட்டம் 62.07 அடியாக உள்ளது. அணைக்கு 2186 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 2090 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4009 மில்லியன் கன அடியாக உள்ளது. இதே நிலை தொடரும் பட்சத்தில் வைகை அணை நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 47 அடி. வரத்து 186 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டி 126.50 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 109 கன அடி தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100.40 மில்லியன் கன அடியாக உள்ளது.

பெரியாறு 0.2, தேக்கடி 0.2, கூடலூர் 6.2, சண்முகா நதி அணை 7, உத்தமபாளையம் 8.1, மஞ்சளாறு 1.8, வைகை அணை 8, சோத்துப்பாறை 10 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News