செய்திகள்
கோப்புப்படம்

திருச்சி-பெங்களூருக்கு மாலை நேர விமான சேவை 27-ந்தேதி முதல் இயக்கம்

Published On 2019-10-18 11:18 GMT   |   Update On 2019-10-18 11:18 GMT
திருச்சி- பெங்களூருக்கு விமான சேவையானது வருகிற 27-ந்தேதி முதல் மாலை நேர சேவையாக மாற்றப்படுகிறது.
கே.கே.நகர்:

கொச்சியில் இருந்து திருச்சி வழியாக பெங்களூருக்கு காலை நேரத்தில் விமானம் இயக்கப்பட்டு வந்தது. இந்த விமான சேவை தினமும் காலை 7.30 மணிக்கு கொச்சியில் இருந்து திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியில் இருந்து 8 மணிக்கு புறப்பட்டு பெங்களூர் நோக்கி செல்லும். பின்னர் அந்த விமானம் மீண்டும் காலை 10.30 மணிக்கு திருச்சி வந்து 11 மணி அளவில் திருச்சியில் இருந்து கொச்சிக்கு இயக்கப்பட்டு வந்தது.

இந்த சேவையானது தொழில்நுட்ப காரணங்களால் கொச்சியிலிருந்து இயக்கப்படாமல் திருச்சியில் இருந்து இயக்கப்படும் நிலை உருவாகி தற்போது இயக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விமான சேவையானது வருகிற 27-ந்தேதி முதல் மாலை நேர சேவையாக மாற்றப்பட்டு பெங்களூருவிலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு 6.50 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும்.

மீண்டும் திருச்சியில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு 8.50 மணிக்கு பெங்களூர் விமான நிலையத்தை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானமானது 74 பயணிகள் அமரக்கூடிய இருக்கைகளை கொண்ட நிலையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருச்சிக்கு காலை நேர சேவையாக இண்டிகோ விமானம் தனது சேவையை நவம்பர் 16-ந்தேதி முதல் வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் பெங்களூருவில் இருந்து காலை 6-50 மணிக்கு புறப்படும் இந்த விமானமானது காலை 8- 15 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும். மீண்டும் இந்த விமானம் காலை 9-15 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு 10-40 மணிக்கு பெங்களூர் விமான நிலையத்தை சென்றடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் மீண்டும் மும்பை மற்றும் புதுடெல்லிக்கு விமானம் இயக்கப்படுவதற்கான ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News