செய்திகள்
வாக்காளர் பட்டியல்

குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி 20-ந் தேதியுடன் முடிகிறது

Published On 2019-10-17 09:13 GMT   |   Update On 2019-10-17 09:13 GMT
குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி வருகிற 20-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் சுமார் 1250 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், கிள்ளியூர், பத்மநாபபுரம், விளவங்கோடு ஆகிய 6 தொகுதிகள் உள்ளன.

கன்னியாகுமரி தொகுதியில் 2 லட்சத்து79 ஆயிரத்து 508 வாக்காளர்கள் உள்ளனர். நாகர்கோவில் தொகுதியில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 797, குளச்சல் தொகுதியில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 459, பத்மநாபபுரம் தொகுதியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 966,

விளவங்கோடு தொகுதியில் 2 லட்சத்து 41 ஆயிரத்து126, கிள்ளியூர் தொகுதியில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 312 வாக்காளர்கள் என மொத்தம் 14 லட்சத்து 97 ஆயிரத்து 168 வாக்காளர்கள் உள்ளனர்.

குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா? என்பதை வாக்காளர்கள் சரிபார்த்து கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவித்து இருந்தார்.

இதற்காக இணையதளம் மற்றும் வோட்டர் ஹெல்ப்லைன் பற்றிய தகவல்களும் வெளியிடப்பட்டது. இதன்படி மாவட்டம் முழுவதிலும் இருந்து 5 லட்சத்து 21 ஆயிரத்து 854 பேர் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? என சரிபார்த்து உள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி வருகிற 20-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே அதற்கு முன்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தங்கள் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கிடையே மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் சுமார் 1250 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வீடு, வீடாக சென்று சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News