செய்திகள்
மழை

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை

Published On 2019-10-17 01:58 GMT   |   Update On 2019-10-17 01:58 GMT
வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் தமிழகம் மற்று புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சென்னையில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தி.நகர், அண்ணாநகர், திருவல்லிக்கேணி, விமான நிலையம், பல்லாவரம், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி, பம்மல், ஆவடி, அம்பத்தூர், பாடி, அயனாவரம், எழும்பூர், முகப்பேர் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களிலும், சென்னையின் புறநகர் பகுதிகளிலும் இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது.

புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் வில்லியனூர், அரியாங்குப்பம், திருவாண்டார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.

வேலூர்: அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

திருப்பூர்: அவிநாசி, ஆட்டையம்பாளையம், சேயூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

திருவண்ணாமலை: வந்தவாசி, செம்பூர், தென்னாங்கூர், பாதூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

தூரத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், சித்தணி, அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
Tags:    

Similar News