செய்திகள்
ஆர்ப்பாட்டம்

வருமான வரித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2019-10-16 14:15 GMT   |   Update On 2019-10-16 14:15 GMT
புதுவை வருமான வரித்துறை ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
புதுச்சேரி:

புதிய பென்ஷன் திட்டத்தை நீக்கிவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 56 ஜெ எனும் பிரிவை நீக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தில் மத்திய அமைச்சர்களின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். 

போனஸ் மற்றும் டி.ஏ.வை தாமதமின்றி வழங்க வேண்டும். 6 லட்சம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தபால், ரெயில், பாதுகாப்பு துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்திற்கு சம்மேளன கிளை தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். கிளை செயலாளர் கோவிந்தன் முன்னிலை வகித்தார். மண்டல செயலாளர் கிஷோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர். கிளை பொருளாளர் சிற்றரசன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News