செய்திகள்
தஞ்சையில் எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பென்சன் திட்டத்தை உருவாக்கக்கோரி தஞ்சையில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2019-10-16 12:53 GMT   |   Update On 2019-10-16 12:53 GMT
பென்சன் திட்டத்தை உருவாக்கக்கோரி எல்.ஐ.சி முகவர்கள் சங்கம் சார்பில் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர்:

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க கூடாது. எல்.ஐ.சி. பாலிசி பிரீமியம் மற்றும் சேவைகள் மீதான ஜி.எஸ்.டியை நீக்க வேண்டும். குழு காப்பீடு வயது வரம்பைத் தளர்த்தி காப்பீடு தொகை 25 லட்சமாக உயர்த்த வேண்டும். அனைத்து முகவர்களுக்கும் மாத ஊதியம் ரூ.18 ஆயிரமும், பென்‌ஷன் திட்டம் உருவாக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் எல்.ஐ.சி. முகவர்களுக்கு சுங்க வரி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி முகவர்கள் சங்கம் சார்பில் தஞ்சையில் எல்.ஐ.சி அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு கோட்டத் தலைவர் தங்கமணி தலைமை தாங்கினார். கோட்ட பொதுச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தொடக்க உரையாற்றினார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான எல்.ஐ.சி முகவர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் தென்மண்டல குழு பொறுப்பாளர் பொன்.வேலுச்சாமி நன்றி கூறினார்.

Tags:    

Similar News