செய்திகள்
டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல் - திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு ஒதுக்கீடு

Published On 2019-10-16 09:59 GMT   |   Update On 2019-10-16 09:59 GMT
டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து மழைக்கால நோய்கள் மக்களை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க கூடாது என்றும், அரசு ஆஸ்பத்திரியில் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும் எனவும் சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து அதன் தாக்கம் நீடித்து வந்தால் அரசு ஆஸ்பத்திரியில் ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். அவர்களுக்கு டெங்கு இருப்பது தெரிய வந்தால் தனி வார்டில் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்தியில் கடந்த சில நாட்களாக சளி, இருமல், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு போதிய மருந்து மாத்திரைகள் அளிக்கப்பட்டு வருவதுடன் டெங்கு அறிகுறி தென்பட்டால் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கவும் டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் அரசு ஆஸ்பத்திரியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் இன்னும் பருவமழை தீவிரமடையவில்லை என்ற போதிலும் அதற்கான முன்னேற்பாடு பணிகளை தயார் நிலையில் வைத்திருக்க சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News