செய்திகள்
குடிநீர்கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்ட காட்சி

குடிநீர்கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

Published On 2019-10-15 17:49 GMT   |   Update On 2019-10-15 17:49 GMT
கடவூர் தாலுகா அலுவலகம் முன்பு குடிநீர்கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தரகம்பட்டி:

கரூர் மாவட்டம், வாழ்வார்மங்கலம் ஊராட்சி, குமரக்கவுண்டனூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களுக்கு கடந்த ஒருமாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த குமரக்கவுண்டனூர் பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் தரகம்பட்டியில் உள்ள கடவூர் தாலுகா அலுவலகம் முன்பு கரூர்-மணப்பாறை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மைலம்பட்டி வருவாய் அலுவலர் பாலசந்திரன், ஊரக வளர்ச்சி அலுவலக மேலாளர் பழனியப்பன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 4 நாட்களுக்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News