செய்திகள்
மழை

ராஜபாளையம் பகுதியில் பலத்த மழை- விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2019-10-15 12:21 GMT   |   Update On 2019-10-15 12:21 GMT
ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நேற்று மாலை 6.30 மணி முதல் இரவு 7.45 மணி வரை பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராஜபாளையம்:

ராஜபாளையம் பகுதியில் நேற்று காலை கடும் வெயில் அடித்தது. மதியம் 3 மணிக்கு மேல் வானம் இருண்டு, மேகம் திரண்டு காணப்பட்டது. தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு திடீ ரென்று மழை பெய்தது.

இதில் தென்காசி தேசிய நெடுஞ்சாலை உட்பட அனைத்து பகுதிகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இரவு 7.30 மணி வரை தொடர்ச்சியாக மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் தேவதானம் மேற்கே நகரையாறு பகுதியில் பெய்த பலத்த மழையால் சாஸ்தா கோவில் அணை நிரம்பி வழிகிறது. 36 அடி கொள்ளளவு கொண்ட அணை விரைவில் விவசாயத்திற்காக திறந்து விட வேண்டும் என விவசாயிகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News