செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

Published On 2019-10-15 08:32 GMT   |   Update On 2019-10-15 08:32 GMT
நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி மற்றும் அவருடைய மனைவி எஸ்தர் டூப்ளோ ஆகிய இருவருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவில் பிறந்த சர்வதேச பொருளாதார மேதையான அபிஜித் பானர்ஜி பொருளாதார ஆராய்ச்சியாளராகவும், பேராசிரியராகவும் திறம்பட பணியாற்றி வருபவர்.

அபிஜித் பானர்ஜி மற்றும் அவருடைய மனைவி எஸ்தர் டூப்ளோ ஆகிய இருவரும் இயக்குநர்களாக உள்ள ஜெ-பால் நிறுவனமும் தமிழ்நாடு அரசும் 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு, இதுவரை 7 துறைகளில் 15 ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் டூப்ளோ உள்பட உலகப் புகழ் பெற்ற பல்வேறு பொருளாதார அறிஞர்களின் கருத்துகளைப் பெற்று தமிழ்நாடு அரசு மக்கள் நலனுக்கான திட்டங்களைத் தீட்டி வருகிறது.

அபிஜித் பானர்ஜி மற்றும் அவருடைய மனைவி எஸ்தர் டூப்ளோ ஆகிய இருவருக்கும் ‘பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு’ கிடைத்ததற்கு தமிழ்நாடு மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News