செய்திகள்
உயர்நீதிமன்ற மதுரை கிளை

தூத்துக்குடி துப்பாக்கி சூடு- சிபிஐ இயக்குநருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Published On 2019-10-14 09:49 GMT   |   Update On 2019-10-14 09:49 GMT
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக சிபிஐ இயக்குனர் நிலை அறிக்கையை தாக்கல் செய்யும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கு கூடுதல் அவகாசம் கோரி சிபிஐ இயக்குநர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்த அன்று, அனுமதியின்றி கூடியது, அவர்களிடம் ஏதேனும் ஆயுதங்கள் இருந்ததா? என விசாரிக்க வேண்டும். போராட்டத்தின் மையப்பொருள் என்ன? என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். இதற்காக கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், சிபிஐ விசாரணை தொடர்பாக கேள்வி எழுப்பியது.



துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இன்னும் எவ்வளவு காலம் தேவை? என கேட்ட நீதிமன்றம், இதுவரை எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான நிலை அறிக்கையை தாக்கல் செய்யும்படி சிபிஐ இயக்குநருக்கு உத்தரவிட்டது. அத்துடன் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News