செய்திகள்
கோப்புப்படம்

மழையுடன் இதமான சீதோசணம்: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2019-10-13 15:42 GMT   |   Update On 2019-10-13 15:42 GMT
மழையுடன் இதமான சீதோசணம் நிலவி வருவதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது ஆப் சீசன் தொடங்கி உள்ளது. கடந்த வாரம் தொடர் விடுமுறை என்பதால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் எலிவால் அருவி, வெள்ளி நீர் வீழ்ச்சி, வட்டகானல், பியர்சோழா நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றது.

மேலும் மலைப்பகுதிகளில் ஆங்காங்கே புதிய அருவிகள் உருவாகி எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என கண்களை கவரும் வண்ணம் இயற்கை காட்சிகள் உள்ளன. பகல் நேரத்தில் இதமான வெயிலும், இரவு நேரத்தில் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த மாறுபட்ட சீதோசணத்தை ரசிக்க அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

பிரையண்ட் பார்க், கோக்கர்ஸ் வாக், தூண்பாறை, பைன் பாரஸ்ட், குணா குகை, மோயர் பாயிண்ட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. மேக மூட்டத்துடன் தூண் பாறையை காண்பதற்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து ரசித்து சென்றனர். சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

Similar News