செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின்

மக்களுடன் கலந்துரையாடல்- நாங்குநேரி காங். வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

Published On 2019-10-09 04:52 GMT   |   Update On 2019-10-09 04:52 GMT
நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டார்.
நாங்குநேரி:

நாங்குநேரி தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. அந்த தொகுதியில் அ.தி.மு.க., காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சைகள் உள்பட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். நேற்று நாங்குநேரியில் பல கிராமங்களில் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ப்பட்ட மக்கள் நலப் பணிகளை விளக்கி ஓட்டு கேட்டார். விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்றும் கூறினார்.

இன்றும் மு.க.ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை தொடர்ந்தார். நொச்சிக்குளம், கிருஷ்ணாபுரம் பகுதியில்  திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார். மக்களுடன் கலந்துரையாடிய அவர், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து கை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். அங்கு கூடியிருந்த மக்களிடையே  பேசிய மு.க.ஸ்டாலின், அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.



“மக்களைப் பற்றி சிந்திக்காத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த அரசு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மானியக் கடன் வழங்கவில்லை. விவசாயம், பெண்கள் மேம்பாடு குறித்து இந்த அரசு கவலை கொள்ளவில்லை.

ஆட்சி மாற்றத்திற்கான முன்னோட்டம் தான் நாங்குநேரி இடைத்தேர்தல். திமுக ஆட்சிக்கு வந்தால்தான் விவசாயிகளும் பெண்களும் மேம்பாடு அடைய முடியும்” என்றும் மு.க.ஸ்டாலின் பேசினார்.
Tags:    

Similar News