ஆரல்வாய்மொழியில் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட நர்சிங் மாணவி பாதுகாப்பு கேட்டு காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
ஆரல்வாய்மொழியில் நர்சிங் மாணவி காதலனுடன் தஞ்சம்
பதிவு: அக்டோபர் 04, 2019 19:56
காதல் ஜோடி.
ஆரல்வாய்மொழி:
குழித்துறை மருதங்கோடு தேரியன்விளை வீடு பகுதியை சேர்ந்தவர் ரெனீத் (வயது 24). இவர் எலக்ட்ரானிக் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படித்து உள்ளார். தற்போது வெள்ள மடத்தில் உள்ள சித்தி வீட்டில் தங்கி கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் மேரிஜெனிஷா (20) பி.எஸ்.சி. நர்சிங் படித்து வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் மேரிஜெனிஷாவை கண்டித்தனர். இதனால் காதல் ஜோடி இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
நேற்று காலை இருவரும் கருங்கல் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து மேரிஜெனிஷாவின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்தனர். மகளை தங்களுடன் வருமாறு அழைத்தனர். ஆனால் மேரிஜெனிஷா பெற்றோருடன் செல்ல மறுப்பு தெரிவித்தார். காதலனுடன்தான் செல்வேன் என்பதில் உறுதியாக இருந்தார்.
போலீஸ் நிலையத்தில் நடந்த ஒரு மணிநேரம் நடந்த பாசப்போராட்டம் தோல்வியில் முடிவடைந்தது. இதனால் மேரி ஜெனிஷாவின் பெற்றோர் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். போலீசார் காதல் ஜோடியை வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.