செய்திகள்
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா

இந்தி மொழி படிப்பதை அரசியலாக்குகிறார்கள்- தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா

Published On 2019-09-27 10:59 GMT   |   Update On 2019-09-27 10:59 GMT
இந்தி மொழி விவகாரத்தை தமிழகத்தில் அரசியலாக்குவதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விமர்சனம் செய்தார்.
கோவை:

கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில், பிரதமர் பிறந்தநாள் விழா கொண்டாட்ட குறும்பட போட்டியின் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கலந்துகொண்டு பேசியதாவது:-

இந்தியை மத்திய அரசு திணிப்பதாக இல்லை. மற்றொரு மொழியை தெரிந்துகொள்வதில் தவறு இல்லை. இதனை தமிழகத்தில் அரசியலாக்குகிறார்கள். பொது மொழி ஒன்று இருப்பது அவசியம். ஒரு மொழி இருப்பதால் இன்னொரு மொழி அழியும் என்ற பிரசாரம் ஒரு கும்பலால் தவறாக இங்கு பரப்பப்படுகிறது.

90 சதவீத தமிழர்களுக்கு மத்திய அரசின் திட்டம் தெரிவதில்லை. அதற்கு மொழியும் ஒரு காரணம். பிரதமர் மோடியின் பேச்சை நான் மொழிமாற்றம் செய்ய விரும்புகிறேன். அதற்கான உரிமம் வாங்கலாம் என நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News