செய்திகள்
காவிரி ஆற்றில் தண்ணீர் வரும் காட்சி

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 27 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு

Published On 2019-09-27 09:59 GMT   |   Update On 2019-09-27 09:59 GMT
ஒகேனக்கல்லுக்கு நேற்று நிலவரப்படி 27 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் வருகிறது.
ஒகேனக்கல்:

கர்நாடக அணைகளில் இருந்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டாலும் காவிரி ஆறு வரும் பாதைகளில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி 27 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் வருகிறது.

மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளிலும் வெள்ள நீர் செம்மண் நிறத்தில் கொட்டுகிறது.

ஒகேனக்கல்லில் இன்று 22-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இன்று 51-வது நாளாக தொடர்ந்து ஒகேனக்கல் அருவி மற்றும் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடித்து வருகிறது என்றாலும் சுற்றுலா பயணிகள் இன்று தடையை மீறி மெயின் அருவியில் குளித்தனர்.




Tags:    

Similar News