செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27,500 கன அடியாக சரிவு

Published On 2019-09-26 04:11 GMT   |   Update On 2019-09-26 04:11 GMT
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு இன்று தண்ணீர் வரத்து 27 ஆயிரத்து 500 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
சேலம்:

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது.

இதனால் தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று 40 ஆயிரம் கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது. பின்னர் மழை குறைந்ததால் இன்று தண்ணீர் வரத்து குறைந்து 27 ஆயிரத்து 500 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரியில் 27 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும், கால்வாயில் 400 கன அடி தண்ணீரும் என மொத்தம் 27,900 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் 16 கண் மதகு வழியாக திறந்து விடப்படுகிறது.

மேட்டூர் காவிரியில் 27 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் செல்வதால் இரு கரைகளையும் தொட்டபடி சீறிப்பாய்ந்து செல்கிறது.

அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் இன்றும் 120.20 அடியாக நீடிக்கிறது.

இனிவரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தால் அந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிட வாய்ப்பு உள்ளது.

ஒகேனக்கல்லில் நேற்று காலை 40 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 28 ஆயிரம் கன அடியாக சரிந்தது. ஆனாலும் மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளையும் மூழ்கடித்தப்படி வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு துறையினரும், போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Tags:    

Similar News