செய்திகள்
கோப்பு படம்

சூலூரில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த 3 பேருக்கு தலா ரூ. 10 ஆயிரம் அபராதம்

Published On 2019-09-25 11:43 GMT   |   Update On 2019-09-25 11:43 GMT
சூலூரில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த 3 பேருக்கு புதிய வாகன சட்டத்தின் படி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சூலூர்:

நாடு முழுவதும் புதிய வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி குடிபோதையில வாகனம் ஓட்டுபவர்கள், ஹெல்மெட் மற்றும் காரில் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்கள் உள்பட போக்குவரத்து வீதியை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கபட்டு வருகிறது.

நேற்று மதியம் சூலூர் போலீசார் கலங்கல் ரோடு, திருச்சி ரோடு ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக குடிபோதையில் மோட்டார் சைக்களில் வந்த கோபால கிருஷ்ணன். செல்வமணி. பன்னீர் ஆகியோர் குடிபோதைபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்தவர்களை விசாரித்த நீதிபதி வேடியப்பன் புதிய வாகன சட்டப்படி 3 பேருக்கும் தலா 10 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராத தொகையை செலுத்திய 3 பேரும் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றனர்.

Tags:    

Similar News