செய்திகள்
கோப்பு படம்

ரூ. 4 லட்சம் அபராதம் வசூல் - திருவள்ளூர் பகுதியில் 19 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

Published On 2019-09-25 09:29 GMT   |   Update On 2019-09-25 09:29 GMT
திருவள்ளூர் பகுதியில் 19 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்த நகராட்சி ஆணையர் இது தொடர்பாக ரூ.4 லட்சம் வரை அபராதம் விதித்துள்ளனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர், காமராஜர் சிலை அருகில் காய்கறி கடை, பழக்கடை, பூக்கடைகள் நடத்தும் வியாபாரிகளிடம் பிளாஸ்டிக் பைகள் தடை விதித்து நகராட்சி ஆணையர் மாரிச் செல்வி தலைமையில், நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்த ராஜ் சுகாதார ஆய்வாளர் ரமேஷ், ராம கிருஷ்ணன், வெயில்முத்து ஆகியோர் பள்ளி மாணவிகளுடன் சென்று விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

அப்போது மந்தாரை இலை, துணிபை மற்றும் பேப்பர் பைகளை வியாபாரிகளிடம் வழங்கினர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி கூறும்போது, ‘ கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் இன்று வரை 19 டன் பிளாஸ்டிக் கழிவுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அபராதமாக ரூ. 4 லட்சம் வரை விதிக்கப்பட்டு இருக்கிறது.

நகராட்சி உள்பட்ட பகுதியில் இயங்கி வந்த பிளாஸ்டிக் பை குடோன் ஒன்று சீல் வைக்கப்பட்டது. செப்டம்பர் 1-ந் தேதி முதல் இன்று வரை 380 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை பறிமுதல் செய்து அதற்கான அபராதமாக ரூ. 17 ஆயிரத்து 300 வரை விதித்துள்ளோம். இனி வரும் காலங்களில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
Tags:    

Similar News