செய்திகள்
சென்னை ஐகோர்ட்

தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

Published On 2019-09-25 05:38 GMT   |   Update On 2019-09-25 05:38 GMT
தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்ற பரிந்துரையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த வி.கே. தஹில் ரமானி மேகாலயா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றியதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தஹில் ரமானி தன் பதவியை கடந்த 6-ந் தேதி ராஜினாமா செய்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றத்திற்கு எதிராக வழக்கறிஞர் கற்பகம் சார்பில் கடந்த 18-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


தலைமை நீதிபதி மாற்றம் தொடர்பாக குடியரசுத் தலைவரின் செயலகம் வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளதாக வழக்கறிஞர் கற்பகம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்ற பரிந்துரையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

மேலும் வழக்கறிஞர் கற்பகம் என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறிய நீதிபதிகள், தஹில் ரமானியின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டு விட்டதால் தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர். 
Tags:    

Similar News