செய்திகள்
புதுச்சேரி

காமராஜ்நகர் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது

Published On 2019-09-23 10:23 GMT   |   Update On 2019-09-23 10:23 GMT
காமராஜ்நகர் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல்நாளான இன்று மதியம் வரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

புதுச்சேரி:

புதுவை காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21-ந்தேதி நடக்கிறது.

தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் இன்று திங்கள்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியது. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் புதுவை உப்பளம் கோலாஸ்நகரில் உள்ள சுற்றுலாத்துறை அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.

இதற்காக சுற்றுலாத்துறை அலுவலகத்தில் அறை தயார் செய்யப்பட்டிருந்தது. காலை 11 மணி முதல் மதியம் 3 மணிவரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். முதல்நாளான இன்று மதியம் வரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

தேய்பிறை என்பதாலும், கட்சிகள் வேட்பாளரை இறுதி செய்யாததாலும் வேட்புமனு தீவிரமடையவில்லை. வரும் 30ம் தேதி வேட்புமனுதாக்கல் செய்ய இறுதிநாள். அக்டோபர் 1 வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடக்கிறது. அக்டோபர் 3-ந்தேதி வேட்பு மனு வாபஸ்பெற கடைசி நாள்.

அன்றைய தினம் மாலை வேட்பாளர் இறுதிபட்டியல் அறிவிக்கப்படும். வரும் சனிக்கிழமை அமாவாசை. அன்றைய தினம் அலுவலகம் கிடையாது. இதனால் 30-ந்தேதி திங்கட்கிழமை பிரதான கட்சிகள் அனைத்தும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யக்கூடும் என தெரிகிறது.

Tags:    

Similar News