செய்திகள்
முக ஸ்டாலின்

மின்கசிவால் ஏற்படும் உயிர் பலியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

Published On 2019-09-23 09:55 GMT   |   Update On 2019-09-23 09:55 GMT
கொளத்தூர் தொகுதியில் மின்கசிவால் ஏற்படும் உயிர் பலியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டா லின் கொளத்தூர் தொகுதி யில் நடைபெற்றுக் கொண் டிருக்கும் பல்வேறு பணிகளை மேற்பார்வையிட்டார். அதன்பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி முழுவதும் அடிக்கடி மின் கசிவு ஏற்படுகின்ற காரணத்தால் பல உயிரிழப்பு கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இதுகுறித்து சட்டமன்றத் தில் 2016-ம் ஆண்டுமுதல் கேள்வி நேரத்திலும், கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் போதும், அரசின் கவனத்திற்கு பல முறை கொண்டு சென்றேன்.

அப்போதெல்லாம் பதிலளித்த, மின்துறை அமைச்சர் பல விளக்கங் களைத் தந்திருக்கிறார். குறிப் பாக, 2,657 கோடி ரூபாய் மத்திய அரசின் மூலமாக இந்தத் திட்டத்திற்கு, மின் கம்பிகள் அனைத்தையும் பிஜி மற்றும் லிஜி, புதைவடக் கம்பிகளாக மாற்ற இருக்கி றோம் என்று உறுதி சொல் லப்பட்டது.

தொடர்ந்து 7 முறை சட்டமன்றத்தில் இதுகுறித்து நினைவுபடுத்திப் பேசி யிருக்கிறேன். அதன்விளை வாக, சில பணிகள் தொடங் கப்பட்டிருக்கின்றன.

ஆனால், அந்தப் பணிகள் போகின்ற போக்கைப் பார்த்தால், 2021 மார்ச் மாதம்தான் முடிவடையும் என்ற நிலையில் சென்று கொண்டிருக்கிறது.

எனவே, உயிர்ப்பலி ஏற்படுவதைத் தடுக்க, உட னடியாகவும், விரைவாக வும் இந்தப் பணியில் சம்பந் தப்பட்ட அதிகாரிகள் முழு மூச்சோடு ஈடுபட்டு முடித்துத்தர வேண்டு மென்று நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

கணேஷ் நகர் பகுதியில் சீரான மற்றும் தடையில்லா மின்சாரம் கேட்டு, நான் தொடர்ந்து வலியுறுத்தி இருக்கிறேன். எனவே, அந்தப் பணிகள் குறித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

கொளத்தூர், வில்லிவாக்கம் தொகுதி களை இணைக்கும் லிசி1 பணிகளை ரயில்வே துறை முடித்திருக்கும் நிலையில், மாநகராட்சி விரைந்து அந்தப் பணிகளை முடித்து, 8 ஆண்டுகளாக நான் கொடுத்துவரும் வலியுறுத்தல்களுக்கு இந்த அரசு விரைவில் செவி சாய்த்துச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி: வடகிழக்குப் பருவமழை தொடங்க இன்னும் ஒரு மாத காலம்தான் இருக்கிறது. ஆனால், கால்வாய்கள் இன்னும் தூர்வாரப்படவில்லை. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடும் பணி இன்னும் நடைபெறவில்லை. தற்போது ஒரு நாள் பெய்த மழையில் கூட சென்னை கடுமையான பாதிப்புகளைச் சந்திதிருக்கிறதே?

பதில்:- ஏற்கனவே, முதலமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் வெளிநாடு சுற்றுப்பயணத்தை ‘சுற்றுலாப் பயணமாக’ சென்றுவிட்டு வந்திருக்கிறார்கள்.

நீங்கள் கேட்பதுபோல், நீர் நிலையைப் பற்றி விவாதிப் பதற்கும், அதுகுறித்து ஆய்வு செய்வதற்கும் முதலமைச்சர் வெளிநாடு செல்லவிருப்பதாக செய்தி கள் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எனவே, வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்து வந்து விட்டு, அந்தப் பணிகளை யெல்லாம் கவனிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News