செய்திகள்
மீட்கப்பட்ட குழந்தை

தஞ்சை பெரியகோவிலில் கேட்பாரற்று கிடந்த பெண் குழந்தை - போலீசார் மீட்டனர்

Published On 2019-09-23 03:47 GMT   |   Update On 2019-09-23 03:47 GMT
தஞ்சை பெரியகோவிலில் கேட்பாரற்று கிடந்த பெண் குழந்தையை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை பெரிய கோவில் என அழைக்கப்படும் புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் மராட்டா நுழைவு வாயிலில் நேற்று முன்தினம் இரவு துணியில் சுற்றப்பட்டு கேட்பாரற்ற நிலையில் குழந்தை ஒன்று கிடந்தது. இதைக் கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார், அந்த பெண் குழந்தையை மீட்டனர். பின்னர் உடனே அவர்கள் குழந்தைகள் உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற குழந்தைகள் மைய அதிகாரிகள் போலீசாரிடம் இருந்து குழந்தையை பெற்றுக்கொண்டு, தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் சேர்த்தனர்.

பிறந்து 10 நாட்களே ஆன அந்த குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த குழந்தையை கோவிலில் விட்டு சென்றது யார்? எதற்காக குழந்தையை கோவிலில் விட்டு சென்றார்கள்? என தஞ்சை மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News