செய்திகள்
லாரிகள் ஸ்டிரைக்

சென்னையில் 6 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்

Published On 2019-09-21 10:19 GMT   |   Update On 2019-09-21 10:19 GMT
மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 6 நாள்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னை:

அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு சட்டம் கொண்டு வந்து உள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

மேலும், லாரிகளுக்கு முறையான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சென்னையில் கடந்த சில நாட்களாக கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் லாரிகளை இயக்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டம் இன்று 6-வது நாளாக தொடர்ந்து நடைபெற்றது.

இந்நிலையில்,  சென்னையில் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

லாரிகளுக்கு முறையான வாடகை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடந்த 3வது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ் பெறப்பட்டதாக கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். 
Tags:    

Similar News