செய்திகள்
வக்கீல்கள்

குமரி மாவட்டத்தில் கோர்ட்டை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2019-09-20 17:10 GMT   |   Update On 2019-09-20 17:10 GMT
நீதிபதிகள் தேர்வில் புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மாவட்டத்தில் கோர்ட்டை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்:

தமிழ்நாடு புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று மாநிலம் முழுவதும் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிதாக நீதிபதிகளை தேர்வு செய்யும் முறை குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைத்தின் அறிக்கைப்படி, நீதிபதி தேர்வு எழுதுபவர்களுக்கு தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியது இல்லை என்றும், நீதிபதியாக தேர்வு பெற்றபிறகு பயிற்சி காலத்திற்குள் தமிழை கற்றுக் கொள்ளலாம் என்பதை திரும்ப பெறவேண்டும்.

புதிதாக தேர்வு செய்யப்படும் நீதிபதிகள் குறைந்த பட்சம் 5 வருடங்கள் வக்கீலாக பணியாற்றி இருக்க வேண்டும் என்ற விதியை உருவாக்க வேண்டும். மோட்டார் வாகன சட்ட திருத்தம், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தொடர்பான உத்தரவு போன்றவற்றை கண்டித்தும், 13 அம்பச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் நாகர் கோவில், பத்மநாபபுரம், குழித்துறை, இரணியல், பூதப்பாண்டி ஆகிய கோர்ட்டுகளிலும் வக்கீல்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வக்கீல்கள் பணியை புறக்கணித்ததால் கோர்ட்டுகளில் பணி பாதிப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில் கோர்ட்டு முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் சங்க தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் நாகராஜன், துணைச் செயலாளர் கோடீஸ்வரன் மற்றும் வக்கீல் கள் மகேஷ், சதாசிவம், உதயகுமார், மதியழகன், ஜெலஸ்டின் மரியஸ்டீபன், ஜோசப் பெனடிக்ட், சிதம்பர தாணுபிள்ளை உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News