செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

நீட் தேர்வு ஆள் மாறாட்டத்துக்கு தமிழக அரசு காரணமல்ல- அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2019-09-20 09:11 GMT   |   Update On 2019-09-20 09:11 GMT
நீட் தேர்வு ஆள் மாறாட்டத்துக்கு தமிழக அரசு காரணமல்ல என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் மூலம் மாணவர் ஒருவர் தேர்வு எழுதி தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் உதித் சூர்யா தலைமறைவாகி விட்டதால் அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இது குறித்து உயர் அதிகாரிகள் அனைத்து மருத்துவ மாணவர்கள் சேர்க்கை பட்டியலை சரி பார்த்து வருகிறார்கள்.

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-



மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஆள் மாறாட்டம் நடந்து இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. மருத்துவ துறை அதிகாரிகளும் போலீசாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமை தான் பதில் அளிக்க வேண்டும். நீட் தேர்வை தமிழக அரசு நடத்தவில்லை. மத்திய அரசு தான் நடத்தியது. எனவே இதற்கு தமிழக அரசு காரணம் அல்ல. இருந்தாலும் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News