செய்திகள்
முல்லைப்பெரியாறு அணை

கூடுதல் தண்ணீர் திறப்பால் தொடர்ந்து சரியும் முல்லைபெரியாறு நீர்மட்டம்

Published On 2019-09-19 10:22 GMT   |   Update On 2019-09-19 10:22 GMT
தொடர்ந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
கூடலூர்:

முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 132 அடிவரை எட்டியது. அதன்பிறகு கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் வைகைஅணைக்கும் தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டு வருகிறது.

இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. பெரியாறு அணையின் நீர்மட்டம் 127.80 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 513கனஅடி. அணையில் இருந்து 1520 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்இருப்பு 4223மி.கனஅடியாக உள்ளது.

வைகை அணையின் நீர்மட்டம் 56 அடி. வரத்து 1408 கனஅடி. மதுரை மாநகர குடிநீருக்கும், பாசனத்திற்காகவும் 960 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2881 மி.கனஅடியாக உள்ளது.

மஞ்சளாறு நீர்மட்டம் 35.20 அடி. சோத்துப்பாறை நீர்மட்டம் 85.11 அடி.

Tags:    

Similar News