செய்திகள்
சேவை மையத்தின் செயல்பாடுகளை கலெக்டர் சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி

பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய செயல்பாடுகளை கலெக்டர் ஆய்வு

Published On 2019-09-18 18:01 GMT   |   Update On 2019-09-18 18:01 GMT
பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தின் செயல்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர்:

மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் பெரம்பலூர் நகரில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இச்சேவை மையம் தனிப்பட்ட இடத்திலோ அல்லது பொது இடத்திலோ வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் ஆதரவை ஒரே கூரையின் கீழ் வழங்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்ட ரீதியான உதவிகளையும், மருத்துவ ரீதியான உதவிகளையும், காவல் துறை ரீதியான உதவிகளையும், அவசர நடவடிக்கை சேவைகள் மற்றும் மீட்பு நடவடிக்கை உடனடியாக பெறும் வகையில் இச்சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த சேவை மையத்தின் செயல்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட சமூக நல அலுவலர் ரேவதி, ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News