செய்திகள்
மழை நீரில் பயிர்கள் மூழ்கின

டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழை - பயிர்கள் மூழ்குவதால் விவசாயிகள் வேதனை

Published On 2019-09-18 10:09 GMT   |   Update On 2019-09-18 10:09 GMT
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தொடரும் கனமழை காரணமாக சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மாலை முதல் இரவு முழுவதும் பல இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக தஞ்சை நகரில் இரவு மழை பெய்தது.

இந்த மழையில் சாலையோரங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து சென்றவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தஞ்சை சூரக்கோட்டை பகுதியில் சம்பா பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதேபோல் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், மதுக்கூர், திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் மழை கொட்டியது. இதனால் பல இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி கிடந்தது.

நாகை-திருவாரூர் மாவட்டங்களில் நேற்று பல இடங்களில் மழை பெய்தது. நாகை மாவட்டத்தில் சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டியது.

டெல்டா மாவட்டங்களில் இன்று காலை 8 மணி நிலவரப்படி பெய்துள்ள மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

கும்பகோணம்-50.60
பூதலூர்-33.40
தஞ்சாவூர்-31
பேராவூரணி-7.20
ஒரத்தநாடு-22.40
திருப்பூண்டி-27.20
தலைஞாயிறு-14.40
வலங்கைமான்-44.2
குடவாசல்-40.2
திருவாரூர்-23.4
நன்னிலம்-42.2
திருத்துறைப்பூண்டி-34.6

Tags:    

Similar News