செய்திகள்
ரிசர்வ் வங்கி

24 மணி நேரமும் ஆன்லைனில் பணபரிமாற்றம் வசதி - டிசம்பரில் அமலுக்கு வருகிறது

Published On 2019-09-17 07:38 GMT   |   Update On 2019-09-17 07:38 GMT
ஆன்லைனில் 24 மணி நேரமும் பண பரிவர்த்தனை செய்யும் வசதி வருகிற டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
சென்னை:

மத்திய அரசு டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகிறது. வாடிக்கையாளர்களை கவர பல்வேறு சலுகைகளையும் அறிவித்து வருகிறது.

தற்போது என்.இ.எப்.டி., ஆர்.டி.ஜி.எஸ் ஆகியவற்றின் மூலம் ஆன்லைனில் செய்யும் பணபரிமாற்றங்களுக்கு கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால், இதே பரிவர்த்தனைகளை வங்கிகளுக்கு சென்று செய்தால் கட்டணம் உண்டு.

ஐ.எம்.பி.எஸ் மூலம் ரூ. 1 லட்சத்துக்கு கீழ் பண பரிமாற்றத்தை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இந்த வசதியை யுபிஐ, கூகுள்பே போன்ற பல செயலிகள் மூலம் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் உடனடியாக பணம் கைமாறும்.

என்.இ.எப்.டி. என்பது ரூ. 2 லட்சத்துக்கு கீழ் பண பரிமாற்றம் செய்வது. இதில் 4 மணி நேரத்துக்குள் பணம் கைமாறும்.

ஆர்.டி.ஜி.எஸ். மூலம் ரூ. 2 லட்சத்துக்கு மேற்பட்ட தொகையை அனுப்ப முடியும். இந்த முறையிலான ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை செய்ய முடியும். வங்கிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை செய்ய முடியும்.

ஐ.எம்.பி.எஸ். போல் என்.இ.எப்.டி., ஆர்.டி.ஜி.எஸ். முறையிலும் ஆன்லைனில் 24 மணி நேரமும் பண பரிவர்த்தனை செய்யலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது வருகிற டிசம்பர் மாதம் அமலுக்கு வர உள்ளது.

என்.இ.எப்.டி. பரிமாற்றங்கள் வழியாக கடந்த நிதியாண்டில் சுமார் ரூ.228 லட்சம் கோடி ரூபாய் பணம் கைமாறி இருக்கிறது.
Tags:    

Similar News