செய்திகள்
எச்.ராஜா

அமித்ஷா கூறியதில் தவறு இல்லை- எச்.ராஜா பேட்டி

Published On 2019-09-16 13:18 GMT   |   Update On 2019-09-16 13:18 GMT
நாட்டின் இணைப்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று அமித்ஷா கூறியதில் தவறு இல்லை என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

குழித்துறை:

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள கோட்டகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

நமது நாட்டிற்கு அன்னிய நாட்டு மொழி இணைப்பு மொழியாக இருப்பதைவிட நமது நாட்டின் ஒரு மொழியே இணைப்பு மொழியாக இருந்தால் வெளிநாட்டில் அதன் அடையாளம் அதிகரிக்கும் என்று அமித்ஷா கூறி உள்ளார்.

அமித்ஷா சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? இதில் எங்கே இந்தி திணிப்பு இருக்கிறது? இந்த நிலையில் இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் தற்போது குரல் கொடுக்கிறார்கள்.

அவர்கள் தமிழை அவமதித்தவர்கள். ஆனால் தற்போது அவர்கள் இந்தி எதிர்ப்பு என்கிறார்கள். அவர்கள் வேண்டும் என்றே மத்திய அரசுக்கு எதிராக மொழி உணர்வை தூண்டி விடுகிறார்கள். இதற்காக மு.க. ஸ்டாலினை கண்டிக்கிறேன்.


மு.க.ஸ்டாலின் உறவினர் உள்பட தி.மு.க.வை சேர்ந்த பலர் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பள்ளிக்கூடங்களை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இந்திக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள். அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ளா விட்டால் அவர்கள் நடத்தும் பள்ளிக் கூடங்களில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்து சமச்சீர் கல்வி கொண்டுவரும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும்.

வருமானத்திற்கு இந்தியும், அரசியலுக்கு தமிழும் என்று அவர்கள் நடந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News