செய்திகள்
விபத்து

திண்டுக்கல் அருகே சரக்கு வேன் மீது ஆம்னி பஸ் மோதல்- பயணிகள் உயிர் தப்பினர்

Published On 2019-09-16 12:33 GMT   |   Update On 2019-09-16 12:33 GMT
திண்டுக்கல் அருகே சரக்கு வேன் மீது ஆம்னி பஸ் மோதியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைரோடு:

கோவையில் இருந்து திருநெல்வேலிக்கு ஆம்னி பஸ் வந்தது. இந்த பஸ்சை நெல்லை மாவட்டம் சீவலப்பேரியை சேர்ந்த பெருமாள் (வயது50) என்பவர் ஓட்டி வந்தார்.

திண்டுக்கல் அருகே மதுரை 4 வழிச்சாலையில் கொடைரோடு மெட்டூர் பாலத்தில் பஸ் சென்றபோது அங்கு பஞ்சராகி சரக்கு வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. பள்ளத்தில் இருந்து சென்றதால் வேன் நிற்பது தெரியாமல் ஆம்னி பஸ் வேனின் பின் பகுதியில் மோதியது.

டிரைவர் திறமையாக செயல்பட்டு பஸ்சை உடனடியாக நிறுத்தியதால் பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து காரணமாக 4 வழிச்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீரமைத்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னர் போக்குவரத்து சீரானது. மெட்டூர் மேம்பாலத்தில் ஏறும் வாகனங்களுக்கு சாலை சரியாக தெரிவதில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடிக்கு சென்ற பால் லாரி நிலை தடுமாறி தடுப்பு சுவரை இடித்து தள்ளி பள்ளத்தில் கவிழ்ந்தது. தற்போதும் ஆம்னி பஸ் கட்டுப்படுத்தப்படாமல் இருந்திருந்தால் பள்ளத்தில் கவிழ்ந்திருக்கும். எனவே இப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News