செய்திகள்
ஜக்கிவாசுதேவ்

சத்குரு மோட்டார் சைக்கிள் பேரணி நாளை சென்னை வருகிறது

Published On 2019-09-14 08:23 GMT   |   Update On 2019-09-14 08:23 GMT
கர்நாடகாவில் இருந்து ஓசூர் வழியாக தமிழகம் வந்தடைந்த சத்குரு மோட்டார் சைக்கிள் பேரணி தருமபுரி, மேட்டூர், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுச்சேரி வழியாக நாளை சென்னை வருகிறது.
சென்னை:

காவிரி நதிக்கு புத்துயிரூட்டவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ‘காவிரி கூக்குரல்’ என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடங்கியுள்ளார்.

இது ஈஷா அவுட்ரீச் மேற்கொள்ளும் 2-வது நதி மீட்பு களப் பணியாகும். இவ்வியக்கத்தின் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் காவிரி நதிப் படுகையில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வியக்கத்தில் இரு மாநில அரசுகள், விவசாயிகள் மற்றும் மக்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக சத்குரு தல காவிரியில் இருந்து கடந்த 3-ந் தேதி மோட்டார் சைக்கிள் பேரணியை தொடங்கினார். அவருடன் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் குழுவும் பயணிக்கிறது. கர்நாடகாவில் இருந்து ஓசூர் வழியாக தமிழகம் வந்தடைந்த இப்பேரணி தருமபுரி, மேட்டூர், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுச்சேரி வழியாக நாளை (15-ந்தேதி) சென்னை வருகிறது.

இதையொட்டி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் மாலை 4 மணிக்கு நடக்கும் பொது நிகழ்ச்சியில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பங்கேற்று பேசுகிறார்.

இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ். பி.வேலுமணி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் சி.ரெட்டி, நடிகை சுகாசினி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். இப்பேரணியின் நிறைவு விழா கோவையில் 17-ந்தேதி நடைபெற உள்ளது.
Tags:    

Similar News