செய்திகள்
மு.க.ஸ்டாலின்

எப்படியாவது இந்தியை திணித்துவிட மத்திய அரசு முயற்சி- மு.க.ஸ்டாலின் தாக்கு

Published On 2019-09-14 05:46 GMT   |   Update On 2019-09-14 05:46 GMT
எந்த பக்கத்தில் இருந்தாவது எப்படியாவது இந்தியை திணித்துவிட மத்திய அரசு முயற்சி செய்வதாக மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னை:

இந்தி தினத்தையொட்டி பாஜக தலைவர் அமித் ஷா “ஒரே நாடு ஒரே மொழி” என்ற அடிப்படையில் வெளியிட்டுள்ள கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அமித் ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும், இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்றும் கூறியிருக்கிறார். ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பதன் மூலம் இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.



பாஜக தலைவரின் இந்த கருத்து, இந்தியை திணிக்க முயற்சி செய்யும் வகையில் இருப்பதாக பல்வேறு தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், எப்பக்கத்தில் இருந்தாவது எப்படியாவது இந்தியை திணித்துவிட முடியாதா என மத்திய அரசு முயற்சி செய்வதாக குற்றம்சாட்டி உள்ளார். மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு பல முயற்சி செய்து தமிழகத்தில் இந்தியை நுழைக்க பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News