செய்திகள்
பிரதமர் மோடி - சீன அதிபர்

மாமல்லபுரத்தில் மோடி-ஜின்பிங் சந்திப்பு - பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் சென்னையில் ஆலோசனை

Published On 2019-09-13 20:30 GMT   |   Update On 2019-09-13 20:30 GMT
பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் அடுத்த மாதம் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
சென்னை:

பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் அடுத்த மாதம் (அக்டோபர்) மாமல்லபுரத்தில் சந்தித்து பேச இருக்கின்றனர். இந்த சந்திப்பின்போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு அக்டோபர் 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. இருநாட்டு தலைவர்கள் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பாதுகாப்பு வசதிகளுக்காக அங்குள்ள இடங்களை உயர் பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ச்சியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், மாமல்லபுரத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் வெளியுறவுத்துறை அதிகாரிகள், பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதைப்போல சீனாவில் இருந்து அந்த நாட்டு அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகளும் இன்னும் சில நாட்களில் சென்னை மற்றும் மாமல்லபுரத்திற்கு வந்து ஆய்வு நடத்த உள்ளனர்.
Tags:    

Similar News