செய்திகள்
முக ஸ்டாலின்.

தமிழ் மொழி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது- மு.க. ஸ்டாலின் பேச்சு

Published On 2019-09-11 16:25 GMT   |   Update On 2019-09-11 16:25 GMT
தமிழகத்தில் தமிழ் மொழி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்று சிவகாசியில் நடந்த திருமண விழாவில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை,

சென்னையில் நடந்த பேராசிரியர் பாலசுப்ரமணியம் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் என்னும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் நேற்று பேசும்பொழுது, வெள்ளைக்காரர்கள் வரவில்லை எனில், இந்தியா சோமாலியா போன்ற நாடாக மாறியிருக்கும். பிற மொழியை கற்று கொள்வதில் தவறில்லை. ஆனால் தாய்மொழிப்பற்று அவசியம் அதிகம் வேண்டும்.

தி.மு.க.காரர்களின் வீட்டிலேயே தமிழ் பெயர் இல்லாத சூழல் நிலவுகிறது. ஒருவர் வீட்டில் மட்டுமல்ல, பலரின் வீட்டிலும்.

தெரிந்த நண்பரிடத்தில் உங்கள் பேத்தியா என்று கேட்டால் ஆம் என்றார். பெயர் என்ன என்று கேட்டால், அனீஷா என்கின்றனர். இன்னொருவரை கேட்டால் அவ்ஸ்வீத் என்று சொல்கின்றனர். இந்த நிலைதான் இப்போது இருக்கிறது. இது நிச்சயம் மாற வேண்டும் இந்த நாட்டை, ஒரே மொழி, ஒரே இனம், ஒரே கலாசாரமாக மாற்ற முயற்சிக்கின்றனர். அதை எதிர்க்கும் உணர்வை அனைவரும் பெற வேண்டும் என கூறினார்.

இந்த நிலையில், சிவகாசியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.  அவர் பேசும்பொழுது, குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும். தமிழகத்தில் தமிழ் மொழி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்று கூறினார்.
Tags:    

Similar News