செய்திகள்
நகை பறிப்பு

ஓய்வு பெற்ற சப்-கலெக்டர் மனைவியிடம் 10 பவுன் நகை பறிப்பு

Published On 2019-09-08 14:30 GMT   |   Update On 2019-09-08 14:30 GMT
நெல்லையில் வீட்டினுள் படுத்து தூங்கிய ஓய்வு பெற்ற சப்-கலெக்டர் மனைவியிடம் 10 பவுன் நகையை மர்ம நபர் பறித்து சென்றார்.
நெல்லை:

நெல்லை தச்சநல்லூர் துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம். இவர் நாகர்கோவிலில் சப்- கலெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கோமதி (வயது 65). இவர்களுக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். 

இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். கோமதிக்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்றிரவு அவர் மாத்திரை சாப்பிட்டு விட்டு தூங்கியுள்ளார். பரமசிவமும் அதே அறையில் தூங்கியுள்ளார். 
 
இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு முன்பக்க கதவை திறந்த மர்ம நபர் ஒருவர் வீட்டுக்கு வந்துள்ளார். அவர்கள் தூங்கி கொண்டு இருந்த அறையின் கதவு திறந்து கிடக்கவே உள்ளே நுழைந்த அந்த நபர் கோமதி கழுத்தில் கிடந்த 10 பவுன் சங்கிலியை பறித்து உள்ளான்.

இதையறிந்து அதிர்ச்சியடைந்த கோமதி, கணவரிடம் கூறியுள்ளார். அவர் எழுந்து மர்ம நபரை விரட்டியுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் அந்த பகுதி முழுவதும் தேடியுள்ளனர். ஆனால் அவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இது குறித்து பரமசிவம் டவுன் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 

உடனடியாக விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி தப்பி யோடிய மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News