செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு

Published On 2019-09-07 05:55 GMT   |   Update On 2019-09-07 05:55 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.29,368-க்கு விற்பனையாகிறது.

சென்னை:

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ரூ. 29 ஆயிரத்தை தாண்டி உயர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த 4-ந்தேதி காலை ரூ. 30 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை பின்னர் மாலை குறைந்தது.

இன்று பவுனுக்கு ரூ. 104 உயர்ந்து ரூ. 29 ஆயிரத்து 368 ஆக உள்ளது. கிராமும் ரூ. 13 அதிகரித்து ரூ. 3 ஆயிரத்து 671-க்கு விற்கிறது.

வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிலோ ரூ. 51 ஆயிரத்து 300 ஆகவும் ஒரு கிராம் ரூ. 51.30 ஆகவும் உள்ளது.

Tags:    

Similar News