செய்திகள்
கரை புரண்டோடும் காவிரி

மேட்டூரில் நீர்வரத்து அதிகரிப்பு - சேலம், ஈரோடு உள்பட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Published On 2019-09-06 14:39 GMT   |   Update On 2019-09-06 14:39 GMT
மேட்டூரில் நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சேலம் :

கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகமான நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 80 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டவுள்ள நிலையில், அணையின் 16 கண் மதகு வழியே இரவு 9 மணி முதல் 2,000 கனஅடி உபரி நீர்  திறக்கப்படவுள்ளது.

இதனால் காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், நாகை, ஈரோடு, சேலம், கரூர், புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர் , நாமக்கல் போன்ற டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, காவிரி கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News