செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சரிவு- ஒரே நாளில் சவரனுக்கு 664 ரூபாய் குறைந்தது

Published On 2019-09-06 10:15 GMT   |   Update On 2019-09-06 10:15 GMT
தங்கம் விலை கணிசமாக உயர்ந்த நிலையில் இன்று ஒரே நாளில் பவுனுக்கு 664 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னை:

தங்கம் விலை கடந்த ஒரு மாதமாக படிப்படியாக உயர்ந்து வந்தது. பவுனுக்கு ரூ.3 ஆயிரம் வரை உயர்ந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரலாறு காணாத வகையில் பவுன் ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம் தொட்டது. எனினும் அன்று மாலையே விலை சற்று குறைந்தது.

நேற்று காலையில் ரூ.30 ஆயிரத்தை தாண்டியிருந்த நிலையில், மாலையில் சற்று குறைந்து ஒரு கிராம் ரூ.3741-க்கும், ஒரு பவுன் ரூ.29,928-க்கும் விற்பனையானது.

இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தேக தங்கத்தின் விலை குறையத் தொடங்கியது. காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.41 குறைந்து ரூ.3700 ஆக இருந்தது.  இதனால் ஒரு பவுன் விலை ரூ.328 குறைந்து ரூ.29,600-க்கு விற்பனையானது.

அதன்பின்னர் பிற்பகல் வர்த்தகத்தின்போதும் தங்கம் விலை மேலும் குறைந்தது. சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.336 குறைந்து, ஒரு சவரன் ரூ.29,264-க்கும் விற்பனை. ஒரு கிராம் ரூ.3,658-க்கு விற்பனை ஆனது. இதன்மூலம் இன்று ஒரே நாளில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.664 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News