செய்திகள்
நாராயணசாமி - முக ஸ்டாலின்

புதுச்சேரியில் 2 சாலைகளுக்கு கருணாநிதி பெயர் - நாராயணசாமிக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

Published On 2019-09-04 04:00 GMT   |   Update On 2019-09-04 04:00 GMT
புதுச்சேரியில் 2 சாலைகளுக்கு கருணாநிதி பெயர் சூட்ட முயற்சிகளை முன்னெடுத்த முதல்-மந்திரி நாராயணசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமிக்கு நன்றி தெரிவித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

புதுச்சேரியில் உள்ள 2 சாலைகளுக்கு தலைவர் கருணாநிதியின் நினைவாக பெயர் சூட்ட முயற்சிகளை முன்னெடுத்த புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல், அதற்கு ஒப்புதல் அளித்த புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் எனது நன்றி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News