செய்திகள்
வாக்காளர் பட்டியல்

சென்னையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி இன்று தொடங்குகிறது

Published On 2019-09-01 03:33 GMT   |   Update On 2019-09-01 03:33 GMT
சென்னை கோட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் விவரங்களில் திருத்தங்களை சிறப்பு செயலி (‘ஆப்’) மூலம் மேற்கொள்ளும் திட்டம் இன்று முதல் ஒரு மாதம் நடைபெற உள்ளது.
சென்னை:

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை கோட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் விவரங்களில் திருத்தங்களை சிறப்பு செயலி (‘ஆப்’) மூலம் மேற்கொள்ளும் திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஒரு மாதம் நடைபெற உள்ளது.



இந்த திட்டம் மூலம் வாக்காளர்கள் தங்களது பெயர், பிறந்த தேதி, முகவரி, புகைப்படம் மற்றும் பாலினம் உள்ளிட்ட விவரங்களை இந்த செயலி மூலமும், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், 1950 என்ற தொலைபேசி மையம் மூலமும், வாக்காளர் உதவி மையத்தில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலகத்திலும், இ-சேவை மையம் மூலமும், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் ஒன்றை கொண்டு திருத்த விவரங்களை பதிவேற்றம் செய்யலாம்.

இந்த திட்டம் மூலம் வாக்காளர்களால் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகள் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அக்டோபர் மாதம் 15-ந்தேதி விரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிடப்படும். மேலும் நவம்பர் மாதம் 2, 3, 10-ந்தேதிகளில் வாக்குச்சாவடியில் நடைபெற உள்ள சிறப்பு முகாம்கள் மூலமாகவும் வாக்காளர்கள் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



Tags:    

Similar News