செய்திகள்
சிறப்பு ரெயில் (கோப்புப்படம்)

நாளை முதல் திருச்சி-வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்

Published On 2019-08-28 10:01 GMT   |   Update On 2019-08-28 10:01 GMT
திருச்சியில் இருந்து வேளாங்கண்ணிக்கு நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 9-ந் தேதி வரை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

திருச்சி:

வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவையொட்டி திருச்சியில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ‘டெமு’ ரெயில் நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 9-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து இரவு 10.15 மணிக்கு புறப்படும் ரெயில் வேளாங்கண்ணிக்கு நள்ளிரவு 2 மணிக்கு சென்றடையும். இந்த ரெயில் திருவெறும்பூர், பூதலூர், தஞ்சாவூர், நீடாமங்கலம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதேபோல வேளாங்கண்ணியில் இருந்து தஞ்சாவூருக்கும், தஞ்சாவூரில் இருந்து திருச்சிக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. வேளாங்கண்ணியில் இருந்து அதிகாலை 3.15 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு தஞ்சாவூருக்கு அதிகாலை 5.45 மணிக்கு சென்றடையும். தஞ்சாவூரில் இருந்து இரவு 8.55 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு திருச்சிக்கு இரவு 10.05 மணிக்கு வந்தடையும்.

நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி இடையே நாளை முதல் வருகிற 8-ந் தேதி வரை சிறப்பு ‘டெமு’ ரெயில் இயக்கப்பட உள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து பகல் 1.45 மணிக்கும், மாலை 3.15 மணிக்கும் வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் புறப்படும். இதேபோல வேளாங்கண்ணியில் இருந்து பகல் 12.30 மணிக்கும், மதியம் 2.30 மணிக்கும் நாகப்பட்டினத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News