செய்திகள்
செய்தியாளர் சந்திப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

வெளிநாட்டுப் பயணத்தை கொச்சைப்படுத்துவதா? -மு.க.ஸ்டாலினுக்கு தமிழக முதல்வர் கண்டனம்

Published On 2019-08-28 04:12 GMT   |   Update On 2019-08-28 04:12 GMT
தனது வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்தி பேசுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக முதலமைச்சர் எடப்பாடி வெளிநாடு புறப்படுவதற்கு முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். அதற்காகத்தான் இந்த பயணம். நான் நேரில் சென்று அழைத்தால்தான் தமிழகத்தில் தொழில் தொடங்க தொழிலதிபர்கள் முன்வருவார்கள்.

நான் ஒன்றும் பெரிய தொழிலதிபர் இல்லை, சாதாரண விவசாயி. தமிழகத்திற்கு புதிய தொழிற்சாலைகள் வரவேண்டும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும், பொருளாதரம் மேம்பாடு அடைய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அதற்காகத்தான் இந்த பயணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, இந்த வெளிநாட்டுப் பயணத்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்தது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.



இதற்கு முதல்வர் பதில் அளிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதற்காக அடிக்கடி வெளிநாடு செல்கிறார்? அவர் அடிக்கடி வெளிநாடு செல்வதன் மர்மம் என்ன? அவர் வெளிநாடு செல்வதற்கான காரணத்தை இதுவரை சொன்னதில்லை.

நான் வெளிநாடு செல்வதை மட்டும் கொச்சைப்படுத்தி பேசுகிறார் ஸ்டாலின். அரசுமுறைப் பயணத்தை சொந்த பயணம் என சொல்வது தவறான கருத்து” என்றார்.
Tags:    

Similar News