செய்திகள்
முக ஸ்டாலின்.

பி.வி. சிந்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published On 2019-08-25 15:23 GMT   |   Update On 2019-08-25 15:23 GMT
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் முதன் முறையாக இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தங்கம் வென்றுள்ளார். மேலும் உலக மகளிர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறை ஆகும்.

இந்நிலையில், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


மு.க .ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 

பி.வி.சிந்துவின் வெற்றி வருங்கால இளம் தலைமுறையினருக்கு உத்வேகமாக இருக்கும். அவர் வரும் காலங்களில் பல வெற்றிகளை பெற நான் வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News