செய்திகள்
கைது

திருப்பூரில் வாகன சோதனையில் 80 கிலோ போதை பாக்கு கடத்திய 2 பேர் சிக்கினர்

Published On 2019-08-24 10:21 GMT   |   Update On 2019-08-24 10:21 GMT
திருப்பூரில் தீவிர வாகன சோதனையில் 80 கிலோ போதை பாக்கு கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை சீர்குலைக்க 6 பயங்கரவாதிகள் ஊடுருவி விட்டதாக தகவல் கிடைத்ததையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட கண்காணிக்கப்பட்டது.

இதனையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் தீவிர வாகனசோதனை மற்றும் கண்காணிப்பில் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார்கள்.

திருப்பூர் மத்திய போலீசார் ஆண்டிப்பாளையம் சோதனைசாவடியில் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மங்களம்- திருப்பூர் ரோட்டில் ஒரு கட்சி கொடி கட்டிய கார் வேகமாக வந்தது.

அதனை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். காரில் இருந்த 2 வாலிபர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். மேலும் காரை சோதனை செய்யக்கூடாது என்று கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர்.

காரின் ரகசிய அறையில் 80 கிலோ போதை பாக்கு மற்றும் கர்நாடகா மதுபாட்டில்கள் 38 இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் உள்ள கோழிப்பண்ணையை சேர்ந்த ஞானபிரகாஷ் (வயது 32), குள்ளே கவுண்டன் பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் இந்த போதைப்பொருட்களை திருப்பூரில் விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து ஞானபிரகாஷ் மற்றும் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 80 கிலோ போதை பாக்கு, 38 மதுபாட்டில்கள் கார் மற்றும் ரூ.10 ஆயித்து 400 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News