செய்திகள்
ஜிஎஸ்டி

ஜி.எஸ்.டி. வரி கணக்கு தாக்கல் செய்ய வருகிற 31-ந்தேதி கடைசி நாள்

Published On 2019-08-24 03:17 GMT   |   Update On 2019-08-24 03:17 GMT
நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு உதவுவதற்காக வருகிற 31-ந்தேதி வரையிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜி.எஸ்.டி.) கீழ் பதிவு செய்துள்ள வரி செலுத்துபவர்கள் மற்றும் உள்நாட்டு சேவை வினியோகஸ்தர்கள் 2017-18 நிதி ஆண்டுக்கான வரி கணக்கு விவரங்களை ‘படிவம்-9’, ‘படிவம்-9 ஏ’ ஆகியவற்றில் வருகிற 31-ந்தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். இந்த கணக்கு விவரங்கள் முதல் தடவையாக தாக்கல் செய்யப்பட உள்ளதால், வரி செலுத்துபவர்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய சுங்கம் மற்றும் மறைமுக வரிகள் வாரியம் எடுத்து வருகிறது.

அதன்படி, சென்னை வடக்கு ஜி.எஸ்.டி. இயக்குனரகம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஆடிட்டர் சுமித் கேடியா பயிலரங்கம் நடத்தியதோடு, வழிகாட்டுதல்களையும் வழங்கினார். இதேபோல கடந்த 21-ந்தேதி மற்றும் 22-ந்தேதிகளில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வரி செலுத்துபவர்கள் 300 பேர் பங்கேற்றனர்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு உதவுவதற்காக வருகிற 31-ந்தேதி வரையிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு உதவி மேஜைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி. வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் இந்த சேவையை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

மேற்கண்ட தகவல் சென்னை வடக்கு ஜி.எஸ்.டி. இயக்குனரகத்தின் முதன்மை கமிஷனர் பி.ஹேமாவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News