செய்திகள்
முக ஸ்டாலின்.

முதல்வரின் சுற்றுப்பயணத்தால் தமிழகத்திற்கு முதலீடா? அல்லது அவருக்கு முதலீடா? -முக ஸ்டாலின் கேள்வி

Published On 2019-08-23 16:46 GMT   |   Update On 2019-08-23 17:35 GMT
முதலமைச்சரின் சுற்றுப்பயணத்தால் தமிழகத்திற்கு முதலீடா? அல்லது அவருக்கு முதலீடா? என தெரியவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை:

சென்னையில் நடந்த திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணியாற்றுவதே திமுகவின் நோக்கம். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணியில் இருந்து பின்வாங்க மாட்டோம்.


சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது தவறு என டெல்லியில் போராடவில்லை, கையாண்ட விதம் தவறு, முறையாக அமல்படுத்தவில்லை என்பதை சுட்டிக்காட்டி போராடினோம். முதலமைச்சரின் சுற்றுப்பயணத்தால் தமிழகத்திற்கு முதலீடா? அல்லது அவருக்கு முதலீடா? என தெரியவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News