செய்திகள்
சாலை மறியல்

திருக்கனூர் அருகே சுத்தமான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2019-08-21 11:35 GMT   |   Update On 2019-08-21 11:35 GMT
திருக்கனூர் அருகே சுத்தமான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருக்கனூர்:

திருக்கனூர் அருகே குமராப்பாளையம் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் பல லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு இருந்தது.

மேல்நிலை நீர்தேக்க தொட்டிஅமைக்கப்பட்டு 3 வருடங்கள் ஆகியும் பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.

மேலும் இப்பகுதியில் குடிநீர் சவுடு கலந்த நீராகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் கூறி இப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொது மக்கள் குமராப்பாளையம் மெயின் ரோட்டில் மண் பானைகளை உடைத்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையறிந்த திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. ஆகி யோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், நீர்த்தேக்க தொட் டிக்கு ஜெனரேட்டர் வசதி அமைக்க வேண்டும், நீர்த்தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட் டுக்கு கொண்டு வர வேண்டும், சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என பல்வேறு பிரச்சினைகளை எடுத்து கூறினர்.

இதையடுத்து பெதுப் பணித்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News