செய்திகள்
அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி

ஜெயலலிதா மரண விசாரணையில் சிறப்பு குழு அமைக்க வேண்டும் - பிரதாப் ரெட்டி

Published On 2019-08-19 10:04 GMT   |   Update On 2019-08-19 10:04 GMT
ஜெயலலிதா மரண விசாரணையில் சிறப்பு குழு அமைக்க வேண்டும் என்று அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.

சென்னை:

அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மருத்துவ மாணவர்களுக்காக தொகுக்கப்பட்ட சிறப்பு நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவில் பங்கேற்ற அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு எவ்வாறு உயர்தர சிகிச்சையை நாங்கள் அளித்தோமோ, அதே போன்று ஜெயலலிதாவுக்கும் உலகத்தரத்திலான சிகிச்சையை அப்பல்லோ மருத்துவமனை அளித்தது

பிரசித்தி பெற்ற உள்நாட்டு மருத்துவர்கள் மற்றும் வெளிநாட்டு மருத்துவர்கள் மூலமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதை நானே நேரடியாக கண்காணித்தேன்.


ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் நாங்கள் தெரிவித்த மருத்துவ ரீதியான கருத்துக்கள் சரிவர மொழியாக்கம் செய்யப்படவில்லை. எனவே மருத்துவ கலைச்சொற்கள் அறிந்தவர்கள், நிபுணர்கள் ஆகியோரை கொண்ட சிறப்பு குழு அமைக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணை தொடங்கினால் முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News